இந்த ஆட்சியில் மோடி நண்பர்கள் மட்டுமே பணக்காரர்களாகிறார்கள் - பிரியங்கா காந்தி ஆவேசம்

rich Modi priyankagandhi
By Irumporai Oct 17, 2021 09:36 AM GMT
Report

பாஜக ஆட்சியில்,  மோடி நண்பர்கள் மட்டுமே பணக்காரர்களாக இருப்பதாக பிரியகாந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சாமானிய மக்கள் பயன்டுத்தக் கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது. மத்திய அரசின் எரிபொருள்  விலை உயர்வுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்

 இந்த நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்:

'பாஜக அரசு ஒவ்வொரு நாளும் டீசல் விலையை அதிகரித்து, தற்போது விலை 100- ஐ தாண்டியது. பாஜக ஆட்சியில், பணவீக்கத்தின் சுமையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் புதைக்கப்பட்டுள்ளனர். மோடி நண்பர்கள் மட்டுமே பணக்காரர்களாகிறார்கள்.' என பதிவிட்டுள்ளார்.