சொந்தமாக ரயில் வைத்திருந்த ஒரே இந்தியர் இவர்தான்.. ஆச்சர்ய தகவல்!

Indian Railways Punjab
By Sumathi Mar 10, 2025 09:47 AM GMT
Report

சொந்தமாக ரயில் வைத்திருந்த இந்தியர் குறித்த தகவல்களை பார்ப்போம்.

நில வழக்கு

கடந்த 2007-ஆம் ஆண்டு லூதியானா-சண்டிகர் ரயில் பாதைக்காக, ரயில்வே சில நிலங்களைக் கைப்பற்றியது. அதில், கட்டானா கிராமத்தை சேர்ந்த சம்பூரன் சிங் என்பவரது நிலமும் கைப்பற்றப்பட்டது.

ludhiana railway station

ஒரு ஏக்கருக்கு ரூ.71 லட்சம் மட்டுமே வழங்கியதால், அவர் வழக்கு தொடர்ந்து ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ரயில்வே ரூ.42 லட்சத்தை மட்டுமே வழங்கியுள்ளது. எனவே, மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஒரு பைக்கில் 3 பேர்; மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண் - வீடியோ காட்சிகள் வைரல்!

ஒரு பைக்கில் 3 பேர்; மாறி மாறி முத்தம் கொடுத்த இளம்பெண் - வீடியோ காட்சிகள் வைரல்!

ரயிலுக்கே ஓனரான நபர்

அங்கு நீதிபதி ஜஸ்பால் வர்மா, செலுத்தப்படாத தொகையை திரும்பப் பெறுவதற்காக டெல்லி-அமிர்தசரஸ் ஸ்வர்ன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலையும் லூதியானாவின் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தையும் ஜப்தி செய்வதாகத் தெரிவித்தார். இதனையடுத்து ரயில் நிலையத்திற்குச் சென்ற சிங், ரயிலின் உரிமையைப் பெற்றார்.

சம்பூரன் சிங்

இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரயில் சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டது. இதனால், சம்பூரன் சிங் 5 நிமிடங்கள் மட்டுமே ரயிலின் உரிமையாளராக இருந்தார். இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. இதன்மூலம் த ஒரு ரயிலின் உரிமையை இந்தியாவில் பெற்ற ஒரே நபர் என்ற பெயரை சம்பூரன் சிங் பெற்றார்.