தமிழ்நாட்டில் ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு திட்டம் சாத்தியமில்லை - அமைச்சர் பி.மூர்த்தி

Tamilnadu ஒரே நாடு only-country only-bond Not-possible Minister P. Moorthy ஒரே பத்திரப்பதிவு சாத்தியமில்லை அமைச்சர் பி.மூர்த்தி திட்டம்
By Nandhini Mar 16, 2022 12:25 PM GMT
Report

கடந்த 5 நாட்கள் முன்பு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடந்தது.

அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தயார் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்காக திருத்தங்களை நாடாளுமன்றமே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியம் கிடையாது. பத்திரப்பதிவு சீரமைப்பு தொடர்பாக விரைவில் மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க இருக்கிறோம் என்றார்.

தமிழ்நாட்டில் ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு திட்டம் சாத்தியமில்லை - அமைச்சர் பி.மூர்த்தி | Only Country Only Bond Not Possible P Moorthy