பஸ் மட்டுமில்ல.. பழைய ரயிலையும் கடல்ல இறக்குவோம் - இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

bus trainocean srilnkanminister
By Irumporai Jun 17, 2021 04:53 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் பழைய பேருந்துகளை கடலில் இறக்கினர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு மீனவர்கள், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் இலங்கையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்வள பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல தேவைபடும்பட்சத்தில் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

 இலங்கை அரசின் இந்த அறிவிப்பை திரும்பபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்