இறப்பிற்கு முன் அழைத்த கவர்ச்சி நடிகை - பதறியடித்து ஓடிவந்த ஆக்ஷன் கிங்!
சில்க் ஸ்மிதாவின் இறுதிச் சடங்கு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.
சில்க் ஸ்மிதா
80ஸ் கிட்ஸுகளின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் சில்க் ஸ்மிதா. அதுமட்டுமல்லாமல் 90ஸ் மற்றும் இப்போது இருக்கும் 2K கிட்ஸுகளுக்கு கூட சில்க் ஸ்மித கூட கனவுக் கன்னியாக இருக்கிறார் இவர் கவர்ச்சி நடிகையாகவும் ஐட்டம் பாடல்களில் நடனம் ஆடுபவராகவும் சிறந்த நடிகையாகவும் இருந்துள்ளார். இவரின் வசீகரமான தோற்றம் மற்றும் பார்வை அனைவரையும் கவர்ந்தது.
[
ரஜினி, கமல் என அனைத்து முன்னை ஹீரோக்களுடனும் இவர் நடித்துள்ளார். ரஜினியின் பல பாடல்களில் இவர் நடனம் ஆடியிருப்பார். பல படங்களில் இவரின் ஒரு பாடலாவது இடம் பெற்றிருக்கும். இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த இயக்குநர்களும் ஏராளம். இவர் தனது 35ஆம் வயதில் கடந்த 1996ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
அர்ஜுன்
இந்நிலையில் அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் தோட்டா பாவாநாராயணா சில்க் ஸ்மிதா குறித்து கூறுகையில் " சில்க் ஸ்மிதா இறுதிச் சடங்கில் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய திரை உலகை சேர்ந்த நடிகர் ஒருவர் என்றால் அது நடிகர் அர்ஜுன் மட்டும்தான்.
ஒருமுறை சில்க் ஸ்மிதா அர்ஜுனிடம் "நான் இறந்து விட்டால் என் சாவுக்கு நீ வருவாயா? என்பது போல் கேட்டுள்ளார். இதைக் கேட்ட அர்ஜுன் என்ன பேச்சு இதெல்லாம் என்று பெரிதாக எடுத்துக்கொல்லவில்லை. பின்னர் சிறிது நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதை கேட்ட அர்ஜுன் அந்த சம்பவம் காரணமாக மிகவும் வேதனை அடைந்தார் என்றும் பேட்டியில் பேசியுள்ளார்.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
