ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டும்தான் - வெளியான முக்கிய அறிவிப்பு!
ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் சிலிண்டர்
வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலையை உலக மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன.
கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசும் அனுமதி கொடுத்துள்ளது. எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.
முறைகேடு
இந்நிலையில் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.
15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு தற்போது SMS அனுப்பப்படுகிறது. முறைகேடாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை தடுக்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.