அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்: தமிழக அரசு

TNGovt OnlineExams AnnaUniversity HighCourt
By Irumporai Apr 15, 2021 06:27 AM GMT
Report

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் உயர்நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக் கொள்ளமுடியாது என தெரிவித்த நீதி மன்றம் மாற்று நடைமுறையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அரியர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அந்த தேர்வை எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்: தமிழக அரசு | Onlineexams Arrearannauniversity Tngovt

இதை ஏற்ற நீதிமன்றம் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை ஜூலை 2வது வாரத்திற்கு பிறகு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் அரியர் மாணவர்களுக்கு மே 17 ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

இதன் காரனமாக அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரியர் மாணவர்களுக்கு மே 17 ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.