ஆன்லைன் ரம்மி விவகாரம் ஆளுநரை சந்திக்க உள்ளோம் - அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆளுநரை சந்திக்க திட்டம்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கோருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இன்று அல்லாது நாளைக்குள் ஆளுநரை சிந்திப்போம்.
அப்போது ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என தெரிவித்துள்ளார் மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.