ஆன்லைன் ரம்மி உயிர்பலிக்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை குற்றச்சாட்டு

M K Stalin BJP K. Annamalai
By Irumporai Dec 01, 2022 09:36 AM GMT
Report

அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  கூறியுள்ளார்.

திறனற்ற திமுக அரசு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். 

 திமுகவினர் தலை குனிய வேண்டும்

அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆன்லைன் ரம்மி உயிர்பலிக்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Online Rummy Issue Annamalai Tweet

தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.

ஆளும் திமுக, அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.