ரம்மி விளையாண்டால் அறிவு வளரும் .. சரத்குமார் புதிய தகவல்

R. Sarathkumar
By Irumporai Dec 13, 2022 06:36 AM GMT
Report

ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விவகாரம் :

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் சென்னை எழும்பூரில் இன்று உண்ணாவிரத போரட்டத்தில் அவரும் அவரது கட்சி தொண்டர்களும் ஈடுபட்டனர்.

ரம்மி விளையாண்டால் அறிவு வளரும் .. சரத்குமார் புதிய தகவல் | Online Rummy Is An Intellectual Game Sarathkumar

ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு : 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், போதைப் பொருட்கள் பள்ளி சிறுவர்களை சென்றடைவது வருத்தமாக உள்ளது. ஆரோக்கியம் இருந்தால் தான் சிறந்த குடிமகனாக வாழ முடியும். இந்தியா மனித வளம் உள்ள நாடு. மனித வளத்தை நாம் பேணி காக்க வேண்டும். ரம்மி விளையாடுவது அறிவுப்பூர்வமான விளையாட்டு என கூறினார்.

ரம்மி விளையாண்டால் அறிவு வளரும் .. சரத்குமார் புதிய தகவல் | Online Rummy Is An Intellectual Game Sarathkumar

மக்கள் ஓட்டு போடுறாங்களா  

ரம்மி விளையாட அறிவு வேண்டும். ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள்.நான் சொன்னால் மட்டும் மக்கள் விடுவார்களா ? . ஓட்டு போடுங்கள் என்றும் சொல்றேன் ஆனால் மக்கள் கேட்கிறார்களா ?.

ரம்மி விளையாண்டால் அறிவு வளரும் .. சரத்குமார் புதிய தகவல் | Online Rummy Is An Intellectual Game Sarathkumar

குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை என்கின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டம் வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்துவிட்டேன் என கூறினார்.ஆன்லைன் ரம்மியை தடுக்க சட்டம் இயற்றுவது அரசின் பணி.என கூறினார்