தடையாகுமா ஆன்லைன் ரம்மி ? - நாளை முதலமைச்சர் எடுக்கும் முக்கிய நடவடிக்கை
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவை நாளை சட்ட சபையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்.
ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா
தமிழக சட்ட சபையில் 2023 -2024 -ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 21 அன்று தாக்கல் செய்யப்பட்டது ,அதன் தொடர்ச்சியாக நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது , இந்த நிலையில் நேற்று மக்களவையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் ஆன்லைன் விளையாட்டுகளை நெறிமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கேள்வியை எழுப்பினர்.
இதற்கு எழுத்து பூர்வமான பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் , அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் ( மாநிலப் பட்டியல் )34 -ஆவதாக " பந்தயம் மற்றும் சூதாடுதல் '' இடம் பெற்றுள்ளது .இதில் ,மாநில அரசுகள் சட்டம் இயற்றிக்கொள்ள அதிகாரம் உள்ளது , என குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் தாக்கல்
இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் (ரம்மி) தடை மசோதாவை நாளை மீண்டும் சட்ட சபையில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தாக்கல் செய்து உரையாற்றயிருக்கிறார் , நீதியரசர் சந்துரு குழு வழங்கிய பரிந்துரை அடிப்படையிலேயே மீண்டும் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாவும் ,தடை மசோதா குறித்த ஆளுநர் எழுப்பிய கேள்விக்கு பேரவையில் விளக்கங்கள் தரப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.