ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் : ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு

Governor of Tamil Nadu
By Irumporai Dec 01, 2022 04:58 AM GMT
Report

ஆன்லைன் ரம்மியினை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19- ம் தேதி நிறைவேறியது, இந்த சட்டத்தை நிறைவேற்ற ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்

ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கவில்லை , ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் , இந்த மசோதா குறித்து ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் : ஆளுநருடன் சட்டத்துறை அமைச்சர் சந்திப்பு | Online Rummy Ban Issue Governor Today

 ஆளுநர் மறுப்பு

அதில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

 ஆளுநர் ரவி கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளித்துள்ளார்.