ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா - ஆளுநர் ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள், குறித்து பொதுவெளியில் மாண்புமிகு ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துகள், அவர் வகிக்கும் பதவி, எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம் ஆகியவற்றுக்கும் மாநிலத்தின் நிர்வாக நலனுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதோடு
ஆளுநர் ஒப்புதல்
அரசமைப்பு சட்டத்துக்கும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளுக்கும் எதிராகவும் இப்பேரவையின் மாண்பை குறைத்து பாராளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமன்றத்தின் மேலாண்மையை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக தனித் தீர்மானம் இயற்றிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.