சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தடை சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு

Government of Tamil Nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Thahir Mar 09, 2023 01:17 PM GMT
Report

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில இன்று மாலை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நிறைவேற்றாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது பற்றி ஆலோசிக்கப்பட்டது.ஆலோசனைக்கு பிறகு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

online-rummy-ban-bill-in-assembly-again

அப்போது பேசிய அவர், வரும் பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.    

தமிழக அரசு சார்பில் ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

 மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருப்பது ஏற்புடையது அல்ல.

இரண்டாவது முறையாக ஆன்லைன் தடைச் சட்டத்தை கொண்டு வரும் போது திருப்பி அனுப்ப முடியாது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.