தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி - மணப்பாறையில் மேலும் ஒருவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒரு நபர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழந்து, அதனால் தற்கொலைகள் நிகழ்வது அதிகமாகி வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
மேலும் இளைஞர் பலி
திருச்சி, மனப்பாறைக்கு அருகே அஞ்சல்காரன்பட்டியைச்சேர்ந்த கூலித் தொழிலாளி வில்சன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட வில்சன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான, தடை சட்ட மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ளனர்.
இளைஞர்களை ஆன்லைனில் விழ வைத்து பின்னர் அவர்களின் பணத்தை இழக்கவைத்து மன உளைச்சலில் அவர்களை தற்கொலை செய்ய வைக்கும் ஆல்னைன் ரம்மியினை தடை செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு