இனி யூபிஐ ( UPI ) பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : அதிர்ச்சியில் பொதுமக்கள்
இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட அளவிற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூபிஐ பணப்பரிவர்த்தனை
இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் பண பரிவத்தனைய அரசு ஊக்குவித்து வருகின்றது, அந்த வகையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ -ல் இணைத்து கொண்டனர் ,அதன் மூலம் கூகிள் பே, போன் பே, பேடி எம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை மாற்றி கொள்கின்றனர்.
இனிமேல் கட்டணம்
இந்த நிலையில் தற்போது National Payments Corporation of India (NPCI) யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது. பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவழிக்கும்போது வாங்கப்படும் பொருட்களை பொருத்து இந்த சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி எரிபொருளுக்கு 0.5%, டெலிகாம், தபால் துறை, கல்வி, விவசாயம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.7%, சூப்பர்மார்க்கெட் பரிவர்த்தனைகளில் 0.9%, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், ரயில்வே சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதுடன், இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.