பெண்ணை தரக்குறைவாக பேசிய கடன் செயலி நிர்வாகிகள்...2 பெண்கள் உட்பட 4 பேர் கைது..!

Arrest Coimbatore OnlineLoanApp LoanApp LoanAppStaff மோசடி ஆன்லைன்ஆப்
By Thahir Mar 22, 2022 05:27 PM GMT
Report

ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய பெண்ணை தரக்குறைவாக பேசிய நிர்வாகிகளை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த சுவாதி(24) தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலியான SMART LOAN APP என்கிற செயலியில் கடன் வாங்கியுள்ளார்.

முறைப்படி கடனை செலுத்தி வந்த நிலையில், இடையில் கடனை திருப்பி செலுத்த கால தாமதமானதால் காலதாமதமானதால் தன்னை செல்போனில் அழைத்து அவதூறாக பேசி,

கூடுதல் தொகையை செலுற்ற மிரட்டுவதாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் Smart loan app என்ற நிறுவனம் மீது புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அழைப்பு வந்த எண்களை ஆராய்ந்தனர்.

அப்போது அந்த அழைப்புகள் பெங்களூரில் இருந்து வந்து இருப்பதை அறிந்து, Smart loan app மேலாளர் அர்ஷயா ,

கஸ்டமர் சர்வீஸ் பொறுப்பாளர் பர்வின் ஆகிய இரு பெண்களையும், உதவி மேலாளர் ரகுமான், டெலி காலிங் பொறுப்பாளர் யாசின் ஆகிய இரு இளைஞர்கள் என 4 பேர் மீதும் மோசடி,

தகவல் தொழில் நுட்ப சட்டத்தை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த Smart loan app உரிமையாளர் குறித்தும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.