ஆன்லைன் லோன் ஆப்பில் பிடிபட்ட இளைஞர்கள்.. சீனாவிற்காக உளவு பார்த்தார்களா?
சீனா செயலியான கந்துவட்டி விவகாரத்தில் சிக்கிய சீனர்களை, சீனாவிற்காக உளவு பார்த்தார்களா? என விசாரணையை நடத்தியுள்ளனர். சமீப நாட்களுக்கு முன்பு ஆன்லை லோன் ஆப்பில் மூலம் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்த, தொடர் விசாரணையில் சீனர்கள் சிக்கினர்.
இதனிடையே, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சீன மொழி பெயர்ப்பாளர்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கந்துவட்டி ஆன்லைன் செயலிகளை பதிவிறக்கம் செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை 46 சாப்ட்வேர்கள் மூலம் திருடியது தெரிய வந்துள்ளது.
மேலும், இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியுள்ள நிலையில், மத்திய உளவுத் துறை மற்றும் RAW அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
இதனால், லட்சக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டதா? சதி வேலைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பறிமாற்றமா? என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது.