ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழிவதை எத்தனை நாட்கள் வேடிக்கைப் பார்க்க போகிறோம் : ராமதாஸ் வேதனை

crime ramadas onlinegame
By Irumporai Apr 12, 2022 06:51 AM GMT
Report

ஆன்லைன் சூதாட்டத்தை தற்போது தடுக்காவிட்டால் அது குற்றங்களின் பிறப்பிடமாக உருவாகும் என பாமா நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

ஆன்லைம் சூதாட்டம் குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று கூறியுள்ள ராமதாஸ் .

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை. அதனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.