கேம் விளையாடுவதில் மோதல் - சமாதானம் செய்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த சிறுவர்கள்!
பல்லடம் அருகே சிறுவர்களிடையே கேம் விளையாடுவதில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்த பிரவீன், பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவர், நேற்று முன் தினம் அதே பகுதியில் உள்ள தன் நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டதும், பிரவீன் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பிரவீனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரவீன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்,
சடலத்தை மீட்டு கொலை செய்த சிறுவர்களை கைது செய்து சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.