ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறுவர்களை மீட்க மீட்பு மையம் - கேரளா அரசு அதிரடி

Kerala Online Game Childrens Addictive Govt
By Thahir Sep 26, 2021 10:38 AM GMT
Report

கேரளாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறுவர்களை மீட்க மீட்பு மையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ள நிலையில் ஆன்லைன் கேம் விளையாடும் பழக்கம் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறுவர்களை மீட்க மீட்பு மையம் - கேரளா அரசு அதிரடி | Online Game Addictive Child Kerala

சிறுவர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி வருவதும், இதனால் அவ்வபோது பல இடங்களிலும் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டு வருகின்றன.

இதனால் ஆன்லைன் கேம்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோரிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் முக்கிய உத்தரவை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ளார். அதன்படி ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்களை மீட்க மீட்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

அதில் ஆன்லைன் கேம் என்பது மாய உலகம் என்ற உண்மையை சிறுவர்களுக்கு உணர்த்தும்படி நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.