வச்சாச்சு செக்: ஆன்லைன் சூதாட்டம் - தண்டனையும், அபராதமும் இதுதான்!
ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை விளையாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் கடந்த 24- ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தண்டனை
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் இல்லையேல் இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை வழங்கி ஒருவர் தண்டிக்கப்பட்டு மீண்டும் அதே தவறு இழைத்தால், 5 ஆண்டுகள் சிறைதண்டனை, 20 லட்சம் அபராதமாகவும் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.