ஆன்லைனில் லைசன்ஸ் பதிவுசெய்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Driving licence Mumbai
By Petchi Avudaiappan Jun 15, 2021 04:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

புனேவில் ஆன்லைனில் லைசன்ஸ் பதிவுசெய்த கல்லூரி மாணவருக்கு பெண் போட்டோவுடன் உரிமம் கிடைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவுசெய்து பயிற்சி ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே தொடங்கிவைத்தார். 

இதில் முதல்நாளே புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பயிற்சி உரிமத்துக்காக ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் உரிமம் கிடைக்கப்பெற்றபோது அதில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு பெண்ணின் புகைப்படம் மாறி வந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதற்காக அவர் ரூ.365ஐ கட்டணமாகவும் செலுத்தி இருக்கிறார். அதன்பின் பயிற்சி தேர்வுக்கு சென்றதில் அந்த மாணவருக்கு 15க்கு 9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக அவர் புனே ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்ததில் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை சேர்க்கும்போது ஏதேனும் குழப்பம் நேர்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்