கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு 27-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
கள்ளக்குறிச்சி கலவரத்தில் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் வரும் 27-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளி சூறையாடல்
கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்தி தனியார் பள்ளியில் மாணவி இறந்ததிர் மர்மம் இருப்பதாக கூறி போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் கலவரமாக மாறியது.இந்த நிலையில் பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்துகள் மற்றும் வகுப்பறைகளை அடித்து நொறுக்கினர்.
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
இதில் பள்ளி முற்றிலும் நிலைகுலைந்தது.இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அமைச்சர் வரும் 27-ம் தேதி முதல் 9,10,11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என்றும்,
அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.