இனி.. வீடு கட்ட உடனடி அனுமதி; ஆனால்.. இதெல்லாம் முக்கியம் - அரசு அறிவிப்பு!

M K Stalin Tamil nadu
By Sumathi Jul 23, 2024 03:24 AM GMT
Report

ஆன்லைனில் கட்டட அனுமதி தரும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வீடு கட்ட அனுமதி

தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை பரப்பளவு, கட்டிடத்தின் உயரம் ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவை வழங்கி வருகின்றன.

இனி.. வீடு கட்ட உடனடி அனுமதி; ஆனால்.. இதெல்லாம் முக்கியம் - அரசு அறிவிப்பு! | Online Approval For Housing Plan Scheme Tn

தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டுவதை எளிதாக்க தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டட அனுமதியை பெறலாம்.

வெறுப்புப் பேச்சுகள்; தமிழர்களிடம் இரட்டை வேடம் போடும் மோடி - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

வெறுப்புப் பேச்சுகள்; தமிழர்களிடம் இரட்டை வேடம் போடும் மோடி - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதல்வர் தொடக்கம்

அதிகபட்சம் 2,500 சதுர அடி வரையிலான மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இந்த ஆன்லைன் அனுமதித் திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கட்டடப் பணிகள் முடிந்ததும், நிறைவுச் சான்று பெறுவதில் இருந்தும் விலக்கும், பரிசீலனை கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்துக்கு கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.