கிடுகிடுவென எகிறிய வெங்காயம் விலை - மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா?
வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
வெங்காயம்
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 57% விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 47 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் சில்லறை விலையில் 65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதற்கு காரணமாக, வெங்காய சாகுபடி காலதாமதம், சாகுபடி பரப்பளவு குறைவு, தாமதமான வரத்து எனக் கூறப்பட்டது.
விலை உயர்வு
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோகித் குமார், ”கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை படிப்படியாக விடுவித்து வருகிறது.
22 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1.7 லட்சம் டன் வெங்காயம் மொத்த விலை சந்தையில் விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே வெங்காயம் விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வை கட்டுப்படுத்தவும் சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கவும் சில்லறை விற்பனையாக ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.