விவோ, ஒப்போ, சியோமி மற்றும் ஒன்பிளஸ் செல்போன்களுக்கு விரைவில் தடை? மத்திய அரசு நோட்டீஸ்

India Xiaomi Banned OnePlus Oppo
By Thahir Oct 20, 2021 05:43 AM GMT
Report

சீனா ஸ்மார்ட் போன்களான ஓப்போ,ஜியோமி,மற்றும் ஒன் ப்ளஸ் போன்ற போன்கள் பாதுகாப்பானதா என விளக்களிக்குமாறு அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய அரசு 220 சீனா செயலிகளை தடை செய்து உத்தரவுவிட்டது.இந்த நிலையில் சீனா செல்போனில் பயன்படுத்தப்படும் தரவு மற்றும் பாகங்கள் பற்றிய விவரங்களை கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தி மார்னிங் கான்டெக்ஸ்ட் அறிக்கை தெரிவிக்கிறது.

விவோ, ஒப்போ, சியோமி மற்றும் ஒன்பிளஸ் செல்போன்களுக்கு விரைவில் தடை? மத்திய அரசு நோட்டீஸ் | Oneplus Oppo Xiaomi Mobiles Banned India Notice

விவோ, ஒப்போ, சியோமி மற்றும் ஒன்பிளஸ் ஆகியவை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 50% க்கும் அதிகமானவை என்று கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளால் விற்கப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்திய நுகர்வோருக்கு பாதுகாப்பானதா என்பதை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களின் சோதனை தேவைப்படும் மற்றொரு அறிவிப்பை இந்திய அரசு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸால் அந்நிறுவனங்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.