“பிள்ளைய பெக்க சொன்னா” - வாயில் நிப்புளை வைத்துக்கொண்டு குழந்தை செய்த சம்பவம்
6 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கிய ஒரு வயது குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் என்றாலே மழலை சிரிப்பும், பொம்மைகளின் உலகத்தில் அவர்கள் நடத்தும் தனி வாழ்க்கையும் தான் நம் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் இவற்றில் இருந்து விலகி சில குழந்தைகள் செய்யும் குறும்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
அந்த வகையில் ஒரு வயது குழந்தை ஒன்று 6 கிலோ எடையிலான பந்து ஒன்றை தூக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 17 வினாடிகள் அடங்கிய இந்த வீடியோ அந்த குழந்தை வாயில் பீடிங் நிப்பிள் வைத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் குந்து போன்ற நிலையில் குனிந்து பந்தை மேலே தூக்கி பின்னர் கீழே வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசி ஒருவர் வரும்காலத்தில் இவர் ஒரு ஒலிம்பிக் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.