சாத்தான்குளம் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம்: கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்

Sathankulam Kanimozhi mp Lockup death
By Petchi Avudaiappan Jun 22, 2021 09:40 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற அந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது. தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சாத்தான்குளம் காவலர்கள் இருவரையும் உயிரிழக்கும் அளவுக்கு சித்ரவதை செய்து அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.

சாத்தான்குளம் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம்: கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல் | One Year Of Sathankulam Issue

இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி கனிமொழி எம்.பி இன்று அவர்களது கடைக்கும் வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்தி ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”இன்று, சாத்தான்குளத்தில் சென்ற ஆண்டு காவல்துறையால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அவர்களின் கடையில் இருவரது உருவப்படங்களுக்கும் அஞ்சலி செலுத்தியபோது, மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் வைராகியத்தோடு எதிர்கொள்ளும் தாய்களை சந்தித்து ஆறுதலும் உறுதியும் சொன்னேன்” என்று தெரிவித்திருக்கிறார்.