ஓபிஎஸ் பதிவிட்ட "ஒற்றை வார்த்தை..." - ஈபிஎஸ் தரப்பு பதிலடி - பரபரப்பில் அதிமுக..!
தன் டுவிட்டர் பக்கத்தில் ஓபிஎஸ் பதிவிட்ட ‘ஒற்றை வார்த்தை"க்கு ஈபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதால் தற்போது அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒற்றை வார்த்தை
டுவிட்டரில் திடீரென ஒரு வார்த்தை டிரெண்டாகி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Amtrak என்ற ரயில் நிறுவனம், Trains என ஒரு வார்த்தையில் டுவிட் செய்தது.
இதனையடுத்து, பலர் தளபதி, கலைஞர், இசை, அம்மா, திமுக, பெரியார், விடுதலை, தமிழன்டா, தமிழ்நாடு என இதுபோன்று ஒரு வார்த்தையில் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஒரு வார்த்தை டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சர்ச்சை வார்த்தை
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒற்றை வார்த்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தொண்டர்கள் என்று குறிப்பிட்டுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தொண்டர்கள் என்று பதிவிட்டுள்ளதால், அவருடைய தொண்டர்களும் டுவிட்டர் பக்கத்தில் தொண்டர்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்தியன், அண்ணா, தங்களால் ஏமாற்றப் பட்டவர்கள்!! என்று பதிவிட்டுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதனை தற்போது எடப்பாடி ஆதரவாளர்கள் தங்கள் இணையதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
தொண்டர்கள்
— O Panneerselvam (@OfficeOfOPS) September 3, 2022