திராவிடம் ட்ரெண்டிஙகில் இணைந்த முதலமைச்சர் ஸ்டாலின் : பின்னணி என்ன?

M K Stalin Tamil nadu DMK
By Irumporai Sep 02, 2022 06:26 PM GMT
Report

ட்விட்டரில் நேற்று காலை முதலே பலரும் ஒரு சொல்லில் ட்வீட் செய்து வருகின்றனர். தனி நபர்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகளில் அக்கவுண்ட்கள் என அனைத்து பக்கங்களிலும் இந்த ஒரு வார்த்தை ட்வீட் தான் தற்போது ட்ரெண்டிங்க்கில் உள்ளது.  

ட்ரெண்டிஙகில் ஒற்றை வார்த்தை

இதற்கான காரணம் என்னவெனில் அமெரிக்காவில் உள்ள ரயில் சேவை நிறுவனமான ஆம்ட்ராக், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், செப்டம்பர் 2 அதிகாலை 12:30 மணிக்கு 'Trains' ரயில்கள் என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருந்தது. இதனையடுத்து பலரும் இதே போல ட்வீட் செய்ய தொடங்கினர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐசிசியின் ட்விட்டர் பக்கம் இரண்டும் கிரிக்கெட் என ட்வீட் செய்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் என ட்வீட் செய்தார்.

தமிழக அரசியல் தலைவர்கள் ட்வீட்

இந்நிலையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்களிடையே இந்த ஒரு வார்த்தை ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒறுங்கிணைப்பாளர் சீமான் ‘தமிழ்தேசியம்’ எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘தமிழன்’ எனவும் ட்வீட் செய்துள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்த நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ‘எடப்பாடியார்’ என ட்வீட் செய்துள்ளார்.

அதே போல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ‘திராவிடம்’ என ட்வீட் செய்துள்ளார்.