குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் எப்போது ? - அமைச்சர் சொன்ன புதிய தகவல்

DMK
By Irumporai Mar 11, 2023 12:54 PM GMT
Report

குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 1000

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கோட்டூர், ஆவாரம்பட்டியில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் எப்போது ? - அமைச்சர் சொன்ன புதிய தகவல் | One Thousand Rupees Minister Periyaswamy

இதன்பின் பேசிய அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார்.   

பெண்கள் பயன்

வரும் 20ம் தேதி தொடங்கும் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார் என கூறினார். மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் அறிவித்த பின், கணக்கெடுப்பு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகு வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் தகுதியுள்ள கோடிக்கணக்கான பெண்கள் இத்திட்டம் மூலம் பயனடைய உள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்