பாரதி கண்ணம்மா ரோஷினியால் ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன செய்தார் தெரியுமா?

bharathikannamma roshiniharipriyan சார்பட்டா பரம்பரை ஜெய்பீம்
By Petchi Avudaiappan Dec 21, 2021 10:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன். அவர் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டாலும் ரசிகர்கள் அவரை மறக்காமல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் சூர்யாவின் ஜெய்பீம், ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை ஆகிய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தார் ரோஷினி என்று தகவல் வெளியானது. ஜெய்பீம் செங்கேணியும், சார்பட்டா பரம்பரை மாரியம்மாவும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்களாகிவிட்டனர். அந்த கதாபாத்திரங்களில் நடிக்க வந்த வாய்ப்பை தான்  ரோஷினி ஏற்க மறுத்திருக்கிறார் .

ரோஷினி மட்டும் செக்கேணியாக நடித்திருந்தால் அவர் நிலைமையே வேறு. இப்படி தேடி வந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டாரே அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கிடையே மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வருமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். வினுஷா பார்ப்பதற்கு உங்களை போன்றே இருந்தாலும் நீங்களாக முடியாது என ரசிகர்கள் கூறியுள்ளனர்.