ஒருதலை காதல்; பெண்ணிற்கு நிச்சயதார்த்தம்..100 அடியாட்களை அனுப்பிய பெண்ணை கடத்திய இளைஞர்
தெலுங்கானாவில் ஓர் இளைஞர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணின் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் அன்று 100 அடியாட்களை அனுப்பி அந்த பெண்ணை கடத்தியுள்ளார்.
ஒருதலை காதல்
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு நேற்றைய தினம் அவரது சொந்த ஊரில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.
அதே ரங்கா ரெட்டி பகுதியில் டீக்கடை நடத்திவரும் நவீன் எனும் இளைஞர் இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மேலும், பலமுறை அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் பல் மருத்துவர் மறுத்து வந்துள்ளார்.
100 ஆடியாட்களை அனுப்பி பெண் கடத்தல்
நேற்று அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் ஆக இருந்துள்ளது. இதனை அறிந்த நவீன் , 100 அடியாட்களை பெண்ணின் வீட்டிற்க்கு அனுப்பியுள்ளார். அவர்கள் அந்த பெண்ணின் வீட்டை தாக்கி, பெண்ணை கடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து பெண்ணின் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு மணிநேரத்தில் அந்த பெண் மீட்கப்பட்டார்.
கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டாலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நவீன் இன்னும் கைது செய்யப்படவில்லை. நவீன் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்.