ஒரே மதம் ,ஒரே மொழி ,ஒரே கலாச்சாரம் : விசிகவின் தேர்தல் அறிக்கையை வெளியானது
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது வி.சி.கவுக்கு பானை சின்னமும் ஒதுக்கப்பட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விழுப்புரத்தில் கட்சியின் தேர்தலை அறிக்கையை வெளியிட்டார்.
15 உறுதிமொழிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள வி.சி.க இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் உள்நோக்கத்தோடும். தனியார்மயமாக்குதல் போன்ற சதி முயற்சிகளை முறியடித்து சமூகநீதியை பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே தேசம் - ஒரே கல்வி என்ற அடிப்படையில் தேசிய கல்வி கொள்கையை வரையறுத்து, அதன்மூலம் ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்பதை நடைமுறைப்படுத்த நடக்கும் முயற்சியை முறியடிப்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
