வெடித்து சிதறிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் - கோபமடைந்த வாடிக்கையாளர்

OnePlus oneplusnord2 OnePlusNord2blast
By Petchi Avudaiappan Aug 11, 2021 09:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சமூகம்
Report

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு-2 ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு 2 5ஜி மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 12 ஜிபி ரேம், 32 எம்பி செல்ஃபி கேமரா, 50 எம்பி பிரைமரி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1200-ஏஐ பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

இதனை தனது தந்தைக்கு வாங்கிய நபர் ஒருவர், அது வெடித்து சிதறியதாக புகார் தெரிவித்தார். அவர் புகைப்படங்கள் எதுவும் வெளியிடாத நிலையில், அவரின் ட்விட்டர் பதிவு அழிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் அந்த நபருக்கு ட்விட்டரில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், "எதிர்பாராதவிதமாக அரங்கேறிய சம்பவத்தால் உங்களின் தந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நம்புகிறோம். இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதற்கான காரணத்தை கண்டறிய தயவு செய்து குறுந்தகவல் அனுப்புங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.