உங்களிடம் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது? அதிகமாக இருந்தால் சிறை தான் - புதிய சட்டம் அமல்!

Government Of India India
By Swetha Jul 18, 2024 07:14 AM GMT
Report

ஒருவரது பெயரில் அதிகமான சிம் கார்டுகள் இருந்தால் சிறை தண்டனை என சட்டம் அமலாகிறது.

புதிய சட்டம் 

நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் தொலைபேசி சாதனமே காரணமாக இருக்கிறது. இதனால் தொலைபேசி பயன்பாட்டில் புதிய நெறிமுறைகளை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒருவர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை தனது பெயரில் வைத்திருக்கலாம்.

உங்களிடம் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது? அதிகமாக இருந்தால் சிறை தான் - புதிய சட்டம் அமல்! | One Person Owning Multiple Sim Card Might Punished

இதை மீறி தனது பெயரில் 10 சிம்கார்டுகளோ அல்லது அதற்கு மேலோ வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்க தொலைத் தொடர்பு சட்டம்-2023 வழிவகுக்கிறது.

இதுவே அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான மாநிலங்களில் ஒருவர் 6 சிம்காடுகள் வரை மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த சட்டத்தை மீறி முதல் முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரமும், அதன்பிறகும் அந்த குற்றம் தொடருமானால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

தமிழகத்தில் வருகிறது BSNL 4G சேவை; இலவச டேட்டாவும் கூட - எப்போது தெரியுமா?

தமிழகத்தில் வருகிறது BSNL 4G சேவை; இலவச டேட்டாவும் கூட - எப்போது தெரியுமா?

சிறை தான்..  

இந்த சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவரை ஏமாற்றி அவர்களின் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு பெறப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

உங்களிடம் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது? அதிகமாக இருந்தால் சிறை தான் - புதிய சட்டம் அமல்! | One Person Owning Multiple Sim Card Might Punished

ஒரு சில சந்தர்ப்பங்களில் இந்த இரண்டுமே விதிக்கப்படலாம். மேலும் பயனரின் அனுமதியின்றி வணிகச் செய்திகளை அனுப்பினால், அந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி சேவைகளை வழங்க தடையும் விதிக்கப்படலாம்.

இதுதவிர சட்டவிரோதமாக வயர்லஸ் கருவி வைத்திருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம், தொலைதொடர்பு சேவைகளை தடுக்கக்கூடிய அங்கீகரிக்கப்படாத சாதனங்களை வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் போன்ற தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன.