குரங்கு அம்மை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு..!

By Thahir Jul 31, 2022 03:49 AM GMT
Report

குரங்கு அம்மை நோய்க்கு பிரேசில் நாட்டில் 41 வயது ஆண் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் உயிரிழப்பு 

இவர்  ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர். கடுமையான நோய் எதிர்ப்பு பிரச்னைகள் அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் பலியானார். குரங்கு அம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உள்ளது.

குரங்கு அம்மை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு..! | One Person Died From Monkey Measles

இந்நிலையில், ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2ஆவது நபர் உயிரிழந்துள்ளார். இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் இது இரண்டாவது உயிரிழப்பு. முதல் நபர் ஸ்பெயினின் கிழக்கு பகுதியை சேர்ந்தவர். அவருக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பும் இருந்துள்ளது.

அடுத்தடுத்து 2 நாட்களுக்குள் ஸ்பெயினில் குரங்கம்மை பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் குரங்கம்மை பாதிக்கப்பட்ட 4,298 பேரில் 64 பேர் பெண்கள்.

அவர்களில் 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 10 மாத குழந்தை மற்றும் 88 வயது முதியவர் என பல்வேறு வயதினருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது.