இதுவரை பார்த்திராத புதுமையான ரன் அவுட் - கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ipl2022 bangladeshpremierleague Andrewrussel
By Petchi Avudaiappan Jan 22, 2022 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

வங்க தேச ப்ரீமியர் லீக் போட்டியில் நிகழந்த புதுமையான ரன் அவுட் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.ஐபிஎல் தொடரை  மாடலாக கொண்டு கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாக இருக்கும் நாடுகளில் 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வங்கதேசத்தில் பிபிஎல் எனப்படும் பங்களாதேஷ் ப்ரீமியர் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் குல்னா டைகர்ஸ் அணி, மினிஸ்டர் குரூப் டாக்கா அணியை எதிர்கொண்டது. இதில் டாக்கா மினிஸ்டர்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆட்டத்தில் டாக்கா அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்திருந்தது. அப்போது திசாரா பெரேரா பந்து வீச அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டு தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு சிங்கிள் எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்முனையில் இருந்த பேட்ஸ்மேன் மகமதுல்லா, ஸ்ட்ரைக்கர் எண்டை அடைந்தபோது ஃபீல்டர் மெகதி ஹசன் எறிந்த பந்து ஸ்டம்பை தட்டியது. பின்னர் அந்த பந்து எதிர் முனையில் இருந்த ஸ்டம்பையும் தட்டியது. இதனைப் பார்த்து முக்கால் தூரத்தை ரிலாக்ஸாக கடந்து கொண்டிருந்த ரஸல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடுவர் முடிவின்படி ரஸல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த ரன் அவுட் கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.