ஒரு மாத குழந்தை கையை திருகி, வாயில் மது ஊற்றிய பெண் - திண்டுக்கல் அருகே பரபரப்பு
ஒரு மாத குழந்தை கையை திருகி, வாயில் மது ஊற்றிய பெண்ணால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தை வாயில் மது ஊற்றிய பெண்
திண்டுக்கல் மாவட்டம், காமராஜர் பேருந்து நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை வாயில் மது ஊற்றியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண் கையில் இருந்து குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை மது குடித்ததில் மயக்கத்தில் இருந்தது. இதனையடுத்து அப்பெண்ணிடம் போலீசார்விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் போதையில் தள்ளாடி கீழே விழுந்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார்
இதனையடுத்து, அக்குழந்தையை போலீசார் சோதனை செய்தபோது, குழந்தையின் கை நன்றாக திருகப்பட்டு சிவந்திருந்தது. அந்தக் குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
சிகிச்சைக்காக சேர்த்த அப்பெண் இரவு நேரத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குழந்தை பெற்றோர்கள் யார்? குழந்தை கடத்தப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.