தனியாக சிக்கிக்கொண்ட தோனி - ஹைதரபாத் அணிக்கு படையெடுக்கும் ஜாம்பவான்கள்
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி ஜாம்பவான்களை கொண்ட பயிற்சியாளர்கள் குழுவை அமைத்திருந்தாலும், ரசிகர்களின் கவனம் தோனியின் பக்கம் தான் உள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு விளையாடும் வீரர்கள் ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
இந்த முறை ஐபிஎல் தொடருக்கு தயாராவதில் மற்ற அணிகளை விட ஹைதராபாத் அணி தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏனென்றால் கடந்தாண்டு அந்த அணி மிக மோசமாக அடி வாங்கி வெளியேறியது. 2 கேப்டன்கள் மாறிய போதும் ஒருவரால் கூட அணியை காப்பாற்றி கொண்டு வர முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் அணிக்குள்ளேயே சண்டைகள், மனக்கசப்புகள் என பல்வேறு சர்ச்சைகள் அந்த அணிக்குள் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டு கோப்பையை வெல்ல அதிரடி திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. அதாவது, பயிற்சியாளர்கள் குழுவில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த டாம் மூடியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒட்டுமொத்த பவுலிங் கோச்சாக இருந்த முத்தையா முரளிதரன், இனி ஸ்பின்னர்களுக்கான பயிற்சியாளராக செயல்படவுள்ளார். டேல் ஸ்டெயின் வேகப்பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரரான டேல் ஸ்டெயின் கடந்த 2013ஆம் ஆண்டு ஐதராபாத் அணிக்காக விளையாடியதன் மூலம் ஐபிஎலுக்குள் நுழைந்தார். அந்த நன்றிகாக தற்போது மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஜாம்பவான் பிரையன் லாராவுக்கு பேட்டிங் கோச் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பீல்டிங் கோட்சாக, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஹேமங் பதானி இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி மிகவும் வலுவான குழுவுடன் களமிறங்கினாலும் தோனியின் பக்கம் தான் ரசிகர்களின் பார்வை உள்ளது. ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் முக்கிய ஜாம்பவான்கள் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு மும்பை அணியில் ஜெயவர்தனே, டெல்லி அணியில் ரிக்கி பாண்டிங், ராஜஸ்தான் அணியில் ஆன்ரூவ் மெக்டொனால்ட், கொல்கத்தா அணியில் மெக்கல்லம் என செயல்பட்டனர். ஆனால் இவர்களின் பயிற்சிகளை எல்லாம் தோனி எனும் ஒற்றை நபர் சாதாரணமாக உடைத்துவிடுகிறார்.
14 வருட ஐபிஎல் வரலாற்றில் பல பயிற்சியாளர்கள் மாறினாலும், தோனியிடம் மட்டும் எந்த வியூகமும் பெரும் அளவில் எடுபடவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இப்ப சொல்லுங்க தனியா சிக்குனது தோனியா? ... இல்ல... ஜாம்பவான்களா?
You May Like This