எலுமிச்சை மரத்தில் காய்த்த அதிசய பழம்: ஆச்சரியமூட்டும் செய்தி
கர்நாடகாவில் 2 கிலோ எடை கொண்ட எலுமிச்சம் பழம் காய்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மைசூரு மாவட்டத்தின் பீடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சனோஜ், அப்பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இவர் தன்னுடைய வீட்டின் பின்புறம் எலுமிச்சை மரத்தை நட்டு வைத்து வளர்த்து வந்தார்.
அதில் தான் ராட்சத எலுமிச்சை பழம் காய்த்துள்ளது. அந்த செடியில் 3 எலுமிச்சை பழங்கள் தான் காய்த்துள்ளது. ஆனால் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம் அளவில் இருந்துள்ளது.
மற்ற 2 எலுமிச்சை பழங்களும் தலா 2 கிலோ எடை கொண்டதாக உள்ளது, இதுபற்றி தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
சிலர் பழத்தை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
தங்கள் வீட்டில் இருப்பது பாரசீக இன எலுமிச்சை மரம் என்றும், முதலில் சிறியதாக காய்த்தது நாளடைவில் வளர்ந்து பெரியதாக மாறிவிட்டது என சனோஜ் தெரிவித்துள்ளார்.