ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் 14ம் தேதி வரை வழங்கப்படும்.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு
corona
food
tamilnadu
sakarbabu
By Irumporai
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூன் 14 வரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு போராடிவருகின்றனர்.
அவர்களது பசியைப் போக்கும் வகையில் நாள்தோறும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கபட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 14. 6 .2021 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.