ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1500 : சோகத்தில் பாகிஸ்தான் பொதுமக்கள்

Pakistan
By Irumporai Jan 10, 2023 11:36 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமை மாவு 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெலியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் கோதுமை மாவு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ஆயிரத்து 500 ரூபாய் வரை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் கோதுமை வாங்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்  சிலர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1500 : சோகத்தில் பாகிஸ்தான் பொதுமக்கள் | One Kg Wheat Is Rs 1500 In Pakistan

கடந்த ஆண்டு போதுமான கோதுமையை பாகிஸ்தான் அரசு இருப்பு வைத்து கொள்ளாமல் இருந்தது தான் தற்போது பாகிஸ்தானில் கோதுமை பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதே சமயம் பாகிஸ்தானில் இரவு நேரங்களில் கடும் மிந்தட்டுப்பாடு நிலவி வருவதவும் குறிப்பிடத்தக்கது