எந்த ஊர் இது? - ஒரு கிலோ தக்காளி ரூ.25 மட்டுமே - கூட்டம் கூட்டமாக அள்ளி சென்ற மக்கள்

Tomato Tamil nadu Vellore
By Karthick Aug 08, 2023 05:10 AM GMT
Report

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலை இன்றும் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், வேலூரில் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் விற்பனையாகின்றது.

விண்ணைமுட்டும் தக்காளியின் விலை

வரத்து குறைந்து போனதால் சென்ற வாரம் முதல் தமிழகத்தின் அநேக இடங்களில் தக்காளியின் விலை கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்பனையாகி மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இந்த விழா உயர்வு தற்காலிகம் என்றாலும், இது சாமானிய மக்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. 

one-kg-tomato-for-25rs-in-vellore

குடியாத்தத்தில் கிலோ ரூ. 25 மட்டுமே

இந்த வாரம் துவக்கம் முதலே இந்த விலைவாசி சரிந்து வந்தாலும்,இன்றும் சென்னை மதுரை, கோவை, நெல்லை போன்ற பகுதிகளில் கிலோ ஒன்று 100 ரூபாயை நெருங்கிய விநோயோகம் செய்யப்பட்டு வருகின்றது.

one-kg-tomato-for-25rs-in-vellore

இருப்பினும் வேலூர் மாவட்டம் குடியாத்ததில் 4 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு, அதாவது கிலோ ஒன்று 25 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வீட்டின் வாசலில் வண்டியில் வந்து இந்த வியாபாரம் நடைபெற்றதால் மக்கள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியுடன் தக்காளியை வாங்கி சென்றனர்.