இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் : ஆளுநர் ஆர். என் . ரவி

Tamil nadu R. N. Ravi
By Irumporai Apr 22, 2022 09:48 AM GMT
Report

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வுகள் வருகின்றன என்றும் அதிலும் அதிகமாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த புத்தி அருகிலுள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் "சமீப காலமாக மன இறுக்கம் (Autism) சிகிச்சையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம்" எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

அதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் இணை வேந்தர் சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்  : ஆளுநர் ஆர். என் . ரவி | One Crore People Affected By Autism Governor Ravi

அதைத் தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி,  இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வுகள் வருகின்றன என்றும் அதிலும் அதிகமாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம் என ஆளுநர் ரவி பேசினார்.  கல்வி நிறுவனத்தில் எனது முதல் வருகையாக இது அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பு, ஆராய்ச்சி,கல்வி மேம்பாடு குறித்து படித்திருக்கிறேன்.

ஆனால் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். இந்தப் பல்கலைக்கழகம் என்னை கவர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு எஸ்.ஆர்.எம் சார்பில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று நடைபெற்று வரும் ஆட்டிசத்தை பற்றிய கருத்தரங்கம் மிகவும் அவசியமானதாக கருதுகிறேன்.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஆய்வுகள் வருகின்றன. அதிலும் அதிகமாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முன்னேறிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் தீர்வு காண வேண்டியது அவசியம்.

குழந்தைகள் பலர் மாற்று குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். மன வளர்ச்சி குன்றி பிறக்கின்றனர். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை பார்த்து கொள்வதில், பெற்றோர்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அமெரிக்காவில் 44 குழந்தைகளில் ஒரு குழந்தை மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

பேசும் பயிற்சி, மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு போன்றவை மூலம் ஆட்டிசம் குணப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்டிசம் குறித்து நமக்கு மிகப்பெரிய விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் ஒரு கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறேன். 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்கு தனி அறிவு வேண்டும். எனவே பெற்றோர்களுக்கு பயிற்சியும் ஆலோசனைகளை வழங்க வேண்டியது அவசியம்.

பல நாடுகளில் இருந்து வந்த அறிஞர்கள் நிபுணர்கள் தங்களுடைய தொழில்நுட்பத்தையும், அறிவையும், அனுபவத்தையும் கல்வியையும் உங்களோடு பகிர உள்ளனர்.

எனவே இதில் கலந்து கொள்ள உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் 1996ம் ஆண்டு முதல், மருத்துவ தொழிற்சார் சிகிச்சைக்கான மையம் செயல்பட்டு வருகிறது.

இது நாட்டிலேயே பழமையான ஒன்றாகும்.   எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் OPD மூலம் மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 35-40 ஆட்டிசம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுவரையில் மொத்தம் 5000 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் 20 நாடுகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தக் கருத்தரங்கத்தில் ஆட்டிஸம் சிகிச்சைக்கான தொழில்நுட்ப பரிமாற்றம், மற்றும் விரிவான ஆராய்ச்சி தரமான சிகிச்சை குறித்து நிபுணர்களால் விவாதிக்கப்பட உள்ளது.