ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தயார் - தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

Election Commissioner one-country-one-election Sushil Chandra ஒரே நாடு ஒரே தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா
By Nandhini Mar 10, 2022 05:54 AM GMT
Report

இன்று உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதேபோல், உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

தற்போது உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ,கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த தயார் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்காக திருத்தங்களை நாடாளுமன்றமே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தயார் - தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா | One Country One Election Sushil Chandra