சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்? முண்டியடித்து எடுத்த பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Dharmapuri
By Thahir 1 வாரம் முன்

சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுக்கள் எடுக்க முண்டியடித்த பொதுமக்கள் நோட்டுக்களை கையில் எடுத்து பார்த்த பின் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையில் கிடந்த ரூபாய் நோடடுக்கள் 

ஈட்டி எட்டும்வரைதான் பாயும்.. பணம் பாதாளம் வரை பாயும் என்ற இந்த கூற்றுக்கு ஏற்ப உலகை ஆட்டிப் படைக்கும் வல்லமை இந்த பணத்திற்கு உண்டு.

கூலி தொழிலாளி முதல் கோடிகளில் புரளும் பெரும் முதலளிகள் வரை பணம் சம்பாதிப்பதில் மும்முரம் அதை அதிகம் சம்பாதிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

On the road Banknotes lying around?

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி வனப்பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோயில் அருகே 2000, 200, 100, 10 ரூபாய் நோட்டு மாதிரிகள் சிதறிக்கிடந்துள்ளன.

ஏமாந்து போன பொதுமக்கள் 

அச்சு அசல் ஒரிஜினல் ரூபாய் நோட்டுக்கள் போன்று இருந்ததால் அந்த வழியாக சாலையில் பயணித்தவர்கள் சிலர் ரூபாய் நோட்டுக்கள் சிதறி கிடக்கிறது என நினைத்து அந்த தாள்களை முண்யடித்துக் கொண்டு எடுத்தனர்.

பின்னர் தாள்களை கையில் எடுத்து பார்த்த போது அது குழந்தைகள் விளையாடும் கலர் தாள்கள் என தெரியவந்ததை அடுத்து ஏமாற்றம் அடைந்தனர்.