? Live: ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் - உரிமையாளர் சங்கம் அறிவிப்பு
ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயங்கும்
மாண்டஸ் புயல் கரையை கடக்க கூடிய கிழக்கு கடற்கரை சாலையில் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்கப்படாது என அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் பேருந்துகளை முன்பதிவு செய்து தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் ஆம்னி பேருந்து சேவை தடையின்றி இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நாகப்பட்டினம், இராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் புயல் கரையை கடக்கும் போது மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.