இனி கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்து - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
ஆம்னி பேருந்து குறித்த தகவலை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து
தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடத்தில் இருந்து புறப்பட்டு வருகிறது.
மேலும், முடிச்சூர் வரதராஜபுரத்தில் 5 ஏக்கரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையத்தில் வசதிகள் செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் திட்டவட்டம்
இதற்கிடையில், ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றிச்செல்வதை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்று அரசு விதித்த கெடுவும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள்.
கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.